சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 - திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' - திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது

தினத்தந்தி
|
4 Oct 2023 7:26 PM IST

‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

திருவனந்தபுரம்,

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 'தலைவர் 170' படத்தின் படக்குழு குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நடிகைகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 'தலைவர் 170' படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் பகத் பாசில், நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் நேற்று அறிவித்தது.

ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு வெளியான 'ஹம்' படத்தில் நடித்திருந்தனர். அதன்பிறகு தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல், நடிகை மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்